• Tue. Apr 7th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

பிரிட்டன் ராணி எலிசபெத்திற்கு கொரோனா தொற்று உறுதி!

இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு கொரோனா தொற்று உறுதியானது என தகவல்.

இங்கிலாந்து நாட்டின் ராணி 95 வயதாகும் இரண்டாம் எலிசபெத்திற்கு லேசான அறிகுறிகள் இருந்ததால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும் இந்த பரிசோதனையில் எலிசபெத் ராணிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள எலிசபெத் ராணி லேசான குளிர் போன்ற அறிகுறிகளை அனுபவித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது.

எனினும் மகாராணி இந்த வாரம் வின்ட்சரில் கடமைகளைத் தொடர அவர் எதிர்பார்த்துள்ளதாகவும் பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிபடுத்தியுள்ளது. எலிசபெத் மகாராணியின் மகன் இளவரசர் சார்லஸ் இந்த மாதம் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றுக்குள்ளானர் என்பது குறிப்பிடத்தக்கது.