• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் முதல் பார்வை வெளியீடு!

அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் “முசாசி”. ஆக்சன் எண்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தில் ‘ பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார். போலீஸ் அதிகாரி வேடமேற்றிருக்கும் பிரபுதேவாவிற்கு இந்த படத்தில் ஜோடியில்லை. இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

விக்னேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, எஸ்.என்.பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ தயாரித்திருக்கிறார். முசாசி படத்தின் முதல் பார்வையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அவருடைய இணையப்பக்கத்தில் வெளியிட்டார். ‘முசாசி’ என வித்தியாசமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் முதல் பார்வையில் பிரபுதேவாவின் கதாபாத்திர தோற்றம், கம்பீரமாக இருப்பதால் இணையவாசிகளின் ஆதரவும், வரவேற்பும் எதிர்பார்ப்பை விட கூடுதலாக கிடைத்து வருகிறது என்கிறார் இயக்குனர்.