தமிழ் நாடகத், திரைப்பட நடிகரும், கருநாடக இசைப் பாடகரும் ஆனவர் கொத்தமங்கலம் சீனு . வி. எஸ். சீனிவாசன் என்ற இயற்பெயர் கொண்ட கொத்தமங்கலம் சீனு, மதுரைக்கு அருகேயுள்ள வற்றாயிருப்பு என்ற ஊரில் பிறந்தவர். கர்நாடக இசையில் பயிற்சி பெற்ற சீனு வேலைத் தேடி செட்டிநாடு பகுதியில் உள்ள கொத்தமங்கலம் வந்தார். இவரது குரல் இனிமை இவரை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது. சீனு நடித்த முதல் திரைப்படம் 1935 ஆம் ஆண்டில் வெளிவந்த சாரங்கதாரா. இவர் நடித்து வெளிவந்த திரைப்படங்களில் தாசி அபரஞ்சி, பக்த சேதா, விப்ரநாராயணா போன்றவை நினைவில் நின்றவை. இவரது கடைசித் திரைப்படம் 1947 ஆம் ஆண்டில் வெளிவந்த துளசி ஜலந்தர். 1947 இதற்குப் பின்னர் இவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. பிற்காலத்தில் இவர் வானொலியிலும், மேடைக் கச்சேரிகளிலும் பாடி வந்தார்.சில படங்களே நடித்தாலும் மனதில் நின்ற ஒரு கலைஞனான கொத்தமங்கலம் சீனு பிறந்த தினம் இன்று..!