• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

சர்வதேச விமான கண்காட்சியில் ‘தேஜஸ்’ களம் காண்கிறது..!

Byகாயத்ரி

Feb 14, 2022

இந்திய விமானப்படை சிங்கப்பூரில் நடக்க உள்ள சர்வதேச விமான கண்காட்சியில் தேஜஸ் என்ற போர் விமானத்தை காட்சிப்படுத்த உள்ளது.

உலக அளவில் உள்ள விமான தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் தளமாக சிங்கப்பூரில் சர்வதேச விமான கண்காட்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு பிப்ரவரி 15 முதல் (நாளை) முதல் பிப்ரவரி 18 வரை சிங்கப்பூரில், விமான கண்காட்சியானது சர்வதேச விமான தொழில் துறை சார்பில் நடத்தப்படுகிறது.இந்த கண்காட்சியில் இந்திய விமானப் படை சார்பில் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக தேஜஸ் எம்.கே.-I என்ற போர் விமானம் காட்சிப்படுத்தபட உள்ளது. இதற்காக 44 பேர் கொண்ட இந்திய விமானப் படையினர் சிங்கப்பூரில் உள்ள சாங்கி என்ற சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

மேலும் இந்த கண்காட்சியில் இந்திய விமானப்படை பங்கேற்பதன் மூலம் தேஜஸ் விமானத்தை காட்சிப்படுத்தவும் மற்றும் அங்குள்ள பிற பங்கேற்பாளர்கள் உடன் நல்ல தொடர்பு கொள்ளவும் இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதேபோல் கடந்த காலங்களில் மலேசியா மற்றும் துபாய் விமான கண்காட்சிகளில் இந்திய விமானப்படை பங்கேற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.