டேஸ்ட்டி ரைஸ்
தேவையானவை:
சாதம் – ஒரு பவுல், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, சீரகம், மிளகு, எள், நறுக்கிய பச்சை மிளகாய், தனியா, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – இரண்டு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, உளுத்தம்பருப்பு, தனியா, மிளகு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியவுடன் எள், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து மேலும் வதக்கி… சாதம், உப்பு, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி சேர்த்து நன்றாகக் கலந்து இறக்கி, சூடாக பரிமாறவும்.