ஒரு இந்திய இசையமைப்பாளரும் மற்றும் மலையாள இலக்கிய எழுத்தாளரும் ஆனவர் குட்டி குஞ்சு தங்கச்சி என்று அறியப்படும் இலட்சுமி பிள்ளை. ஓமணத்திங்கள் கிடாவோ என்ற பிரபல மலையாளப் பாடலின் இசையமைப்பாளரும், சுவாதித் திருநாள் ராம வர்மனின் அரச சபையில் ஒரு இசைக்கலைஞருமான இரவிவர்மன் தம்பியின் மகளாவார். இவர் ஹரிப்பாடு கொச்சுப்பிள்ளை வாரியரிடம் படித்தார். இதே காலகட்டத்தில் தனது தந்தையிடமிருந்து திருவாதிரை நடனத்தையும் கற்றுக்கொண்டார். இவர் பார்வதி சுயம்வரம் மற்றும் மித்ரசகாமோச்சம் மற்றும் சிறீமதி சுயம்வரம் போன்ற பல ஆட்டகதைகளை எழுதியுள்ளார். மேலும் அஞ்ஞாதவாசம் என்ற நாடகத்தையும் எழுதியுள்ளார். தங்கச்சி, கேரளாவின் முதல் பெண் கவிஞராகவும் மற்றும் முதல் இசையமைப்பாளராகவும் இருந்துள்ளார். சமசுகிருதத்தில் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்த இவர், காம்போதி, கல்யாணி, நாட்டை, கமாசு மற்றும் சுருட்டி போன்ற பல ராகங்களில் பாடல்களை இயற்றினார்.இத்தகைய திறமை வாய்ந்த முதல் பெண் கவிஞரான குட்டி குஞ்சு தங்கச்சி பிறந்த தினம் இன்று..!