• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சான்ஸ் தேடும் காப்பி இயக்குநர்! கடுப்பில் காதலன்!

நம்பர் நடிகையை சகோதரி போல நினைத்து உதவும், காப்பி இயக்குநர் அவரை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்வதற்கான தீவிர முயற்சியில் இறங்கி உள்ளாராம். அப்படி நடந்தால் ஆபத்து நமக்குத்தானே என பயம் வந்துவிட்டதாம் நம்பர் நடிகையின் காதலுனுக்கு! மேலும், காப்பி இயக்குநர் செய்யும் உதவிகளையும் காதலர் முடக்கி வருவதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றன!

மார்க்கெட் உள்ளவரை மட்டுமே, திரையுலகில் சாதிக்க முடியும் என்பதை நன்கு உணர்ந்த நம்பர் நடிகை சாமர்த்தியமாக காய் நகர்த்தி படங்களை தேர்வுசெய்து நடித்து வருகிறார்! இன்னும் 5 ஆண்டுகளுக்கு தனக்கு நிச்சயம் மார்க்கெட் டவுன் ஆகாது என்று உறுதியாக உள்ளாராம்! ஆனால், (காதலன்) இயக்குநருக்கோ ஏற்கனவே காலம் கடந்து விட்டதே என்று மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம்!

கூட பிறக்காத சகோதரியாக நம்பர் நடிகையை பார்த்து வரும் காப்பி இயக்குநர், அவரது புகழ் தென்னிந்தியாவோடு முடங்க கூடாது! பாலிவுட்டுக்கும் போக வேண்டும் என்றெண்ணி நம்பர் நடிகை அங்கே பிரபல நடிகையாக மாற்றும் முயற்சியில் காப்பி இயக்குநரே நேரடியாக களத்தில் குதித்து இருக்கிறாராம். பல நிறுவனங்களுடன் சந்திப்பை ஏற்படுத்திக் கொடுக்க நடிகையின் தோற்றத்தையும் நடிப்பையும் பார்த்து அசந்து போனவர்கள் டஜன் கணக்கில் படங்களை குவிக்க ரெடியாகி விட்டார்களாம். டஜன் கணக்கில் படங்களா? நாட்கள் நீண்டு விடுமே! என்ற கலக்கத்தில் உள்ள காதலர், நடிகைக்கு கடிவாளம் போடும் விதமாக அவருக்காக குவியும் வட இந்திய படக் கதைகள் சரியில்லை என குறை கூறி பல படங்களை நிராகரிக்க வைத்து வருகிறாராம்.

ஏற்கனவே கணவர் நடிகர் கடிவாளம் போட்டதால் தான் ஒரு நடிகை விவாகரத்து கேட்டு கம்பியை நீட்டி விட்டார் என்பதையும் நன்கு அறிந்து வைத்துக் கொண்டிருக்கும் காதலர் இந்த விவகாரத்தில் எந்தவொரு பிரச்சனையும் மனக்கசப்பும் வந்து விடக் கூடாது என்பதற்காக பக்குவாமாக பல விஷயங்களை செய்து வருகிறாராம். ஆனால் எத்தனை நாட்கள் இப்படி காப்பாற்ற முடியும் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் வந்துகொண்டிருக்கின்றன!