• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பஜாஜ் குழுமத் தலைவர் ராகுல் பஜாஜ் காலமானார்…!

பஜாஜ் குழுமத் தலைவர் ராகுல் பஜாஜ் உடல்நலக்குறைவால் காலமானார்.

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமம் பஜாஜ். இந்த நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர் ராகுல் பஜாஜ். இவர் உடல் நலனைக் காரணம் காட்டி பஜாஜ் குழுமத் தலைவர் பதவியிலிருந்து ராகுல் பஜாஜ் கடந்தாண்டு விலகினார். இதனையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலமானார். இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் முன்னணி தொழில் அதிபர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 83 வயதான ராகுல் பஜாஜ் நாட்டின் மிக உயரிய விருதான பத்ம பூஷண் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.