• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஜூலியை கதறி அழவைத்த ஹவுஸ்மேட்ஸ்!

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மொத்த போட்டியாளர்களும் ஜூலியை டார்க்கெட் செய்து வருகின்றனர். ஜூலிக்கு ஹவுஸ்மெட் செக் வைத்தாலும் அவர் மக்கள் மனதில் உயர்ந்து விட்டார். ஓவியாவின் ஆர்மியே இவருக்கு தற்போது ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 1ல் இருந்த ஜூலிக்கும் பிக் பாஸ் அல்டிமேட்டில் இருக்கும் ஜூலிக்கும் நிறையவேறுபாடு உள்ளது. குறும்பட சர்ச்சையில் சிக்கிய ஜூலி பிக் பாஸ் வீட்டில் பெயரை கெடுத்துக்கொண்டு வெளியேறினார். இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சினிமா என்று பிஸியாக இருந்து வருகிறார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.

தற்போது பிக் பாஸ் அல்டிமேட்டிற்கு வந்து இருக்கும் ஜூலி திறமையாகவே யோசித்து கவனமாக விளையாடி வருகிறார். ஒரு குழந்தையின் ஆபரேஷனுக்கு நிதி திரட்டி உதவி செய்தது. மேலும், பல குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார் என்று தெரிந்ததும் ரசிகர் பலரும் ஜூலிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால், வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் ஜூலியை திரும்ப திரும்ப கார்னர் செய்து வருகின்றனர். திங்கட்கிழமை நடைபெற்ற ஓபன் நாமினேஷனிலும் ஜூலி சேஃப் கேம் விளையாடுகிறார். ஜூலி ஜூலியாகவே இல்லை என்று கூறி அவரை நாமினேட் செய்தனர்.

பிக் பாஸ் அல்டிமேட்டில் இன்று எல்லாவற்றிலும் பங்கெடுத்துக்கொள்ளாதவர் ஜூலி என மொத்த போட்டியாளர்களும் அவரை கூறி வருகின்றனர். திருடன் போலீஸ் டாஸ்கில் உண்மையில் ஜூலி சிறப்பாகவே விளையாடினார். இந்த டாஸ்கில் விளையாடாமல் அனைவர் இடத்திலும் சண்டைப்போட்டுக்கொண்டு இருந்தது வனிதா தான். அவரின் பெயரை பாலாவைத்தவிர மற்ற யாரும் சொல்லவில்லை.

யார் எப்படி ஜூலிக்கு செக் வைத்தாலும் ஜூலி மக்கள் மனதில் உயர்ந்து விட்டார். ஓவியாவின் ஆர்மியே இவருக்கு தற்போது ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த வாரம் டாப்3 இடத்தில் இருக்கிறார். டேஞ்சரில் சுஜா இருக்கிறார். இதனால் இந்த வாரம் இவர் வெளியே அதிகவாய்ப்பு உள்ளது