• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அடுத்து வந்த அதிர்ச்சி தகவல் .. மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை.

குரங்கு காய்ச்சல் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 3 வது அலைக்கு எதிராக போராடி வரும் நிலையில், தற்போது குரங்கு காய்ச்சல் எனப்படும் கியாசனூர் வன நோய்(kyasanur Forest Disease) கேரளாவில் உள்ள வயநாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இதன் முதல் பாதிப்பானது கல்பெட்டா அருகே உள்ள ஒரு கிராமத்தில் பதிவாகியுள்ளது. இந்த குரங்கு காய்ச்சலால் முன்னதாக விலங்குகளும் பதிவாகியுள்ளது.

மேலும் இது டிசம்பர் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட மாதங்களில் தான் இந்த காய்ச்சலின் வெளிப்பாடு இருக்கும். இதன் முதல் வழக்கு 2013இல் நூல் நூல் பூலாவில் பதிவாகியுள்ளது. குரங்கு காய்ச்சல் என்பதுFlaviridae எனும் குடும்பத்தைச் சேர்ந்த வைரஸால் ஏற்படும் ஒரு வகை நோயாகும். ஒட்டுண்ணி மூலன் இந்த வைரஸ் பரவுகிறது.

1957ஆம் ஆண்டு சிவமெக்கா மாவட்டத்தில் உள்ள கியாசனுர் காடுகளில் இருந்து நாட்டிலேயே பதிவாகியதால் கே.எஃப்.சி. என அறியப்பட்டுள்ளது. இதன் அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, மற்றும் வயிற்று வலி ஆகியவை இருக்கும். வன தொடர்பான தொழிலில் ஈடுபட்டுள்ள நபர் ஒருவருக்கு இது போன்ற அறிகுறிகளுடன் அப்பாறையில் உள்ள சமூகநல மையத்திற்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் பப்ளிக் ஹெல்த் லேபில் நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு குரங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது. அதே தொடர்ந்து அந்த ஊராட்சியை சேர்ந்த 20 நபர்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. மேலும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த நோய்த் தடுப்புக்கான வழிமுறைகளாவன: குரங்குகளுடன் உள்ள தொடர்பை தவிர்க்க வேண்டும். குரங்குகள் இறந்தால் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். காடுகளுக்குள் நுழையும்போது கையுறைகள் மற்றும் பாதுகாப்பு ஆடைகளை அணியவேண்டும். துணிகளை வென்னீரில் கழுவி சூரிய ஒளியில் உலர வைக்க வேண்டும். இதன் மூலமாக இந்த குரங்கு காய்ச்சலை தடுக்க முடியும்.