• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தேனி: ‘கலப்பட’ உணவா…?- எங்களிடம் தெரிவிங்க…

தேனி மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, மாவட்ட உணவு பாதுகாப்பு தர நிர்ணயத்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை இணைந்து, தேனி வெஸ்டர்ன் காட்ஸ் ஹோட்டலில், இன்று (பிப்., 8) காலை 10.30 மணிக்கு விழிப்புணர்வு சிறப்பு கூட்டத்தை நடத்தியது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தேனி மாவட்ட தலைவர் பி. செல்வக்குமார் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் கே.எஸ்.பெருமாள், மாநில இணைச் செயலாளர் எம்.காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வி.திருவரங்கப்
பெருமாள் வரவேற்றார். மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர் பி.ராகவன் நிருபர்களிடம் கூறியதாவது: கடைகளில் விற்கப்படும் உணவு பொருள் பாக்கெட்டுகளில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிட்டிருக்க வேண்டும். காலாவதி பொருட்கள் விற்றால் கடைக்காரர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களிடம் குறைந்தது, 2000ம் ரூபாய் அபராத தொகையாக வசூலிக்கப்படும். உணவு பொருட்கள் கலப்படம் குறித்து தொடர்ச்சியாக புகார் வந்தால், அவர்கள் மீது கோர்ட் நடவடிக்கை பாயும். பாலித்தீன் பைகள் ஒழிப்பு குறித்து மாவட்டத்தில் பரவலாக வழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வணிகர் சங்க நிர்வாகிகளை அணுகி, அவர்களிடம் ‘மஞ்சள் பை’ பயன்பாடு அதிகரிக்க தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளோம். அவர்களும் அதை பின்பற்றுவதாக தெரிவித்துள்ளனர். கடந்த 6 மாதத்தில் 1500 கிலோ வரை, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 300 கடைகளுக்கு மேலாக ‘நோட்டீஸ்’ கொடுக்கப்பட்டுள்ளது. உணவு கலப்படம் குறித்து புகார் தருபவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும். இதனால் பொதுமக்கள் தைரியமாக முன்வந்து புகார் அளிக்கலாம். இவ்வாறு கூறினார். தொழிலாளர் நலத்துறை உதவி உதவி கமிஷனர் பி.ஆர்.சிவக்குமார், தொழிலாளர் நலத் துறை உதவி ஆய்வாளர் கே.அறிவழகன், தொழிலாளர் நல அலுவலர் (பெரியகுளம்) பி.ஆனந்தி, அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் செய்தி தொடர்பாளர் (பி.ஆர்.ஓ.,) வேல்முருகன் உட்பட சம்பந்தப்பட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டு, வணிகர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினர். மாவட்ட பொருளாளர் சி.அருஞ்சுணைக் கண்ணன் நன்றி கூறினார்.