தென்னிந்தியாவில் பிரபலமான சினிமா பிரபலங்களான கமல்ஹாசன், அர்ச்சுன், மம்முட்டி, வடிவேலு போன்றவர்கள் கொரோனா மூன்றாவது அலையில் தொற்றுநோய்க்கு உள்ளானார்கள் அதனை மறைக்காமல் பொதுவெளியில் அறிவித்துவிட்டு தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுஉரிய சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டுவந்தார்கள் அந்த வரிசையில்
தெலுங்கு நடிகர் சிரஞ்சிவிக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபற்றி அறிவித்துவிட்டு தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையை மேற்கொண்டுவந்தார் அதனால் அவர் நடித்து வந்த காட்பாதர் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.தற்போது பூரண நலமடைந்துள்ள சிரஞ்சீவி ஐதராபாத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டதால் காட்பாதர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மோகன்ராஜா இயக்குகிறார். இது மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் ரீமேக் ஆகும்.
கொரோனாவில் இருந்து மீண்ட மெகாஸ்டர் சிரஞ்சீவி






; ?>)
; ?>)
; ?>)
