• Mon. Aug 3rd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

புனித் ராஜ்குமாரை கௌரவித்த RRR படக்குழு

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆலியாபட், அஜய் தேவ்கான், சமுத்திரகனி ஆகியோர் நடித்திருக்கும் படம் RRR உலகம் முழுவதும் எப்போது வரும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த படம் RRRஆனால் சோதனையாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி கொரோனா காரணமாக அடிக்கடி மாற்றி வைக்கப்பட்டு வருகிறது. ஜனவரியில் வெளியாகி இருக்க வேண்டிய இந்த படம் கொரோனா பரவல் காரணமாகவும் மற்றும் 50 சதவீத இருக்கை அனுமதி என்கிற நிபந்தனை காரணமாகவும் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது

அந்தவகையில் சமீபத்தில் மார்ச்-18 அல்லது ஏப்ரல்-28 என இரண்டு தேதிகளை அறிவித்து இதில் ஒரு தேதியில் ஆர்ஆர்ஆர் படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இந்தநிலையில் தற்போது மார்ச்-25ல் ஆர்ஆர்ஆர் படம் உறுதியாக ரிலீஸாகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவர்கள் குறிப்பிட்ட இரண்டு தேதிகளில் ஏதோ ஒன்றில் வெளியாகாமல் புதிய ஒரு தேதியை அறிவித்ததற்கு
நெகிழ்ச்சியுடன் கூடிய கௌரவப்படும் ஒரு பின்னணியும் இருக்கிறதுஅதாவது சமீபத்தில் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் பிறந்த தினம் வரும் மார்ச் 17ஆம் தேதி வருகிறது அன்றைய தினம் அவர் கடைசியாக நடித்த ஜேம்ஸ் என்கிற திரைப்படமும் வெளியாக இருக்கிறது. புனீத் ராஜ்குமாரை கௌரவப்படுத்தும் விதமாக அந்த படம் வெளியாகும் அன்று கர்நாடக திரையரங்குகளில் வேறு எந்த படத்தையும் ரிலீஸ் செய்யாமல் ஜேம்ஸ் படத்தை மட்டுமே ரிலீஸ் செய்வதற்கு கர்நாடக திரையுலகமும் திரையரங்கு உரிமையாளர்களும் தீர்மானித்துள்ளனர்.இந்த நிலையில் RRR படம் பான் இந்தியா ரிலீஸ் என்பதால் கர்நாடகாவிலும் ஒரேசமயத்தில் ரிலீஸாக வேண்டும் அதனால் மார்ச் 18ஆம் தேதி புனித் ராஜ்குமாரின் ஜேம்ஸ் படம் ரிலீஸ் ஆவதற்கு தாங்களும் ஒத்துழைப்பு தரும் விதமாக தங்களது பட ரிலீஸை ஒரு வாரம் கழித்து மார்ச்-25க்கு மாற்றி அறிவித்துள்ளது படத்தயாரிப்பு நிறுவனம்