• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

குமரியில், 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை!

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டி நீரில் அழுத்தி கொலை செய்துவிட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குழித்துறை அருகே கழுவன்திட்டை காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெபஷைன். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே சுற்றுலா தலமான வர்க்கலையில் ரிசோர்ட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜி (27). இவர்களுக்கு ப்ரியா (2) மற்றும் 6 மாத பெண் குழந்தையும் உண்டு.

இந்த நிலையில் விஜியின் தாயார் தேவாலயத்துக்கு சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை மாலையில் வீட்டுக்கு வந்த போது வீட்டருகேயுள்ள தண்ணீர் தொட்டியில் 2 குழந்தைகளும் நீரில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்துள்ளனர். வீட்டினுள் சென்று பார்த்தபோது விஜி தூக்கில் தொங்கி இறந்த நிலையில் இருந்ததைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தார்!

இது குறித்து மார்த்தாண்டம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தக்கலை டிஎஸ்பி கணேசன், அப்பகுதிக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.