• Mon. Aug 3rd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

திமுக அறிக்கையின்படி நகைக்கடன் தள்ளுபடி..என்ன நிலவரம்?

Byகாயத்ரி

Feb 1, 2022

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, கூட்டுறவு வங்கிகளில் 40 கிராமுக்கு கீழ் நகைக் கடன் பெற்றவர்களின் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தவுடன், 40 கிராமுக்கு உட்பட்ட நகைகள் மீதான கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்பது போன்ற நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக் கடன் தள்ளுபடி செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.அதன்படி, 13,47,33 பேர் மட்டுமே நகைக் கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் எனவும், 35,37,693 பேர் தகுதியற்றவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாதவர்களின் நகைகள் ஏலம் விடப்படும் என தெரிவித்ததாக தகவல் பரவியது.இதனை அடுத்து, ஒரு சில மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகள் இதுகுறித்து அறிவிப்புகள் வெளியிடத் தொடங்கின. எனினும், தகுதியற்றவர்களின் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.