• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஒரு நாளைக்கு ரூ.3,00,000 சம்பளமா? யாருப்பா அந்த நடிகை?

ரூபாலி கங்குலி அதிக சம்பளம் வாங்கும் இந்திய தொலைக்காட்சி நடிகையாக உள்ளார். இவர் ஒரு நாளைக்கு ரூ.3 லட்சம் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

நடிகை ரூபாலி கங்குலி ‘அனுபமா’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு வயது 44. இவர் தற்போது இந்திய தொலைக்காட்சியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாறியுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!

ரூபாலி மூத்த நடிகை என்பதால் ஒரு நாளைக்கு ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் இந்த சீரியலில் நடிக்க தொடங்கினார். தற்போது, நடிகை ஒரு நாளைக்கு ரூ.3 லட்சம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்திய தொலைக்காட்சியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற சாதனையை நடிகை ரூபாலி கங்குலி படைத்துள்ளார். இந்த ‘அனுபமா’ சீரியல் இந்தியாவில் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் பெரும் புகழ் பெற்றது. ஒரு வருடத்திற்கும் மேலாக டிஆர்பி குறையாமல் நிரூபித்த ஒரே சீரியல் ‘அனுபமா’ தான்.