• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தில் இணைந்திருக்கிறார் நடிகர் சூரி.

ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி, சாதனா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு ‘பேரன்பு’ வெளியாகி பாராட்டுக்களைக் குவித்தது. இந்தப் படத்துக்குப்பின் மிஷ்கின் இயக்கிய ‘சைக்கோ’ படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் ராம் நடித்திருந்தார். இந்த நிலையில் நிவின் பாலி – அஞ்சலி இணையும் புதிய படத்தினை இயக்கி வருகிறார் ராம்
இப்படத்தை மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி தயாரிக்கிறார். கடந்த ஆண்டு இதன் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் துவங்கியது. இந்த நிலையில், படப்பிடிப்பில் நடிகர் சூரி இன்று இணைந்துள்ளார். இதுகுறித்து, நடிகர் சூரி கூறியிருப்பதாவது
இன்று இனியதொரு தொடக்கம். இயக்குநர் அண்ணன் ராம் மற்றும் பிரதர் நிவின் பாலியுடன் முதல்முறையாக ‘பயணிப்பதில்’ பெரு மகிழ்ச்சி. அண்ணன் சுரேஷ் காமாட்சிக்கு நன்றி” என்று இருவருடனும் இருக்கும் புகைப்படங்களைப் உற்சாகமுடன் பகிர்ந்திருக்கிறார்.