• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொள்ளாச்சியில், 14 லட்ச ரூபாய் மது அழிப்பு

Byadmin

Jan 31, 2022

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பொள்ளாச்சி நகரம், சுற்று வட்டார கிராமங்கள், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களிலிருந்து சட்டவிரோதமாக கடத்தி விற்பனைக்காக கொண்டுவரப்படும் மது ஆகிவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். இதில் கடந்த ஜனவரி மாதம் முதல் இம்மாதம் வரை பறிமுதல் செய்யப்பட்ட மது, மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி தரையில் கொட்டி அழிக்கப்பட்டது.

மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில், பொள்ளாச்சி கோட்ட கலால் அலுவலர் விஜயகுமார், மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா, உதவி ஆய்வாளர் ஜான் ஜினியன் சிங், டாஸ்மாக் உதவி மேலாளர் லட்சுமி,காவலர்கள் சுமதி, வனிதா,பெரியசாமி, சரவணக்குமார், சாந்தகுமார், காளிதாஸ் ஆகியோர் மேற்பார்வையில் இப்பணி நடந்தது.

இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் கூறுகையில், இந்த ஒரு ஆண்டில் சட்டவிரோதமாக விற்க வைத்திருந்த 10 ஆயிரத்து 446 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி பறிமுதல் செய்யப்பட்ட மது நகரின் ஒதுக்குப்புறமான பகுதியில் தரையில் கொட்டி அழிக்கப்பட்டது. சட்டவிரோத மது விற்பனையை தடுக்கவும், வெளிமாநிலங்களில் இருந்து மது கடத்தி வருவதை தடுக்கவும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.என்றனர்!