• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மர்மமான முறையில் எரிந்த நிலையில் கிடந்த இளைஞரின் பிரேதம்

Byகுமார்

Jan 28, 2022

மதுரை வைகையாற்றில் உடல் எரிந்த நிலையில் பிரேதம் மீட்பு போலீசார் விசாரணை.

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள ஆற்றங்கரை பகுதியில் அடையாளம் தெரியாத 25 மதிக்கதக்க மர்ம நபரின் உடல் எரிந்த நிலையில் கிடைத்துள்ளதாக மதுரை கரிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து பிரேதத்தை தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இளைஞரை சில மர்ம கும்பல் கொலை செய்துவிட்டு இங்கு கொண்டு வந்து பிரேதத்தை எரிப்பதற்கு முயற்சி செய்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. தொடர்ந்து இறந்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.