• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

வேலூரில் காவல் நிலைய எழுத்தரின் அராஜகம்???

Byமதன்

Jan 28, 2022

வேலூர் மாவட்டம் வடக்கு காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிபவர் பாலமுருகன். இவர் முன்னதாக வேலூர் பாகாயம், பரதராமி காவல் நிலையங்களிலும் பணியாற்றியுள்ளார்..

இவரிடம் வரும் புகார்களை மறைக்க கையூட்டு வாங்குவதாக இவர்மீது பல புகார்கள் எழுந்துள்ளன.. இதில் முன்னதாக அவர் பணியாற்றிய இடங்களிலும் இதே புகார்கள் எழுந்ததாக கூறப்படுகிறது! அதேபோல் தற்போது, வேலூர் வடக்கு காவல் நிலையத்திலும் பல புகார்களை இவர் மறைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன!

வடக்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட தனியார் மருத்துவமனை எதிரே உள்ள லாட்ஜ்களில் நடக்கும் குற்றங்களுக்கு ஏற்ப தொகையை பெற்றுக்கொண்டு ஆதாரங்கள் ஏதேனும் வந்தால் தன் தொலைபேசி மூலம் அவர்களை உஷார் செய்துவிடுவதாகவும், மேலும் கள்ளச்சாராயம், சூதாட்டம் உள்ளிட்ட குற்றங்களுக்கும் துணை போவதாகவும் கூறப்படுகிறது! அவ்வாறு கையூட்டு தரவில்லை என்றால் அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்து மிரட்டுவதாகவும் அப்பகுதியில் குற்றம் சாட்டுகின்றனர்!

இது ஒருபுறமிருக்க முன்னாள் காவல்துறை டிஐஜி. ஊரடங்கு காலத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்களை கணிசமான தொகையை பெற்றுக்கொண்டு இவர் விட்டதாக இவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. வடக்கு காவல் நிலையத்தில் நேர்மை கொண்ட அதிகாரிகள் இருப்பினும், இது போன்ற சிலர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, காவல்துறை அதிகாரிகள் கூறி வருகின்றனர்!