வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வருடமாக பாகாயம் தெற்கு, அரியூர், வடக்கு காவல், விரிஞ்சிபுரம், பள்ளிகொண்டா, அணைக்கட்டு, வேப்பங்குப்பம் உள்ளிட்ட காவல்நிலைய எல்லைகளில் தொடர்ச்சியாக இரு சக்கர வாகனங்கள் திருடுபோயின.
இந்நிலையில், சின்ன எல்லாபுரம் கேகே நகரைச் சேர்ந்த சசிக்குமார், இன்று காலை துத்திப்பட்டு சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் சென்ற அணைக்கட்டு பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் வழிமறித்து அவரை மிரட்டி பாக்கெட்டில் வைத்திருந்த பணம் ரூபாய் ஆயிரத்தி பிடிங்கி கொண்டு அவர் வைத்திருந்த இரண்டு சக்கர வாகனத்தையும் பிடிங்கி கொண்டு தலைமறைவு ஆனவரை மாலை 5 மணிக்குள் தொரப்பாடி எம்ஜிஆர் சிலை அருகில் சென்றவரை பாகாயம் காவல் உதவி ஆய்வாளர் ஜி.ரவிச்சந்திரன் மற்றும் காவலர்களும் வாகண தணிகையின்போது சசிக்குமாரை மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் அவர் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனைதொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர்நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சசிகுமார் இடமிருந்து 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.








