• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சமந்தா வழியில் தமன்னா குத்துப் பாடலுக்கு நடனமாடினார்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா. ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தமன்னா, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமில்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை தமன்னா தெலுங்கில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியிருக்கிறார்.

கிரண் கொரபாட்டி இயக்கத்தில் வருண் தேஜா கதாநாயகனாக நடிக்கும் ‛கனி’ என்ற படத்தில் தமன் இசையமைப்பில் உருவாகியுள்ள ‛கூட்தே’ என்னும் ஒரு பாடலுக்கு தமன்னா நடனமாடியிருக்கிறார். இந்த பாடலை ராம்ஜோகய்யா சாஸ்திரி எழுத ஹரிகா நாராயண் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே புஷ்பா படத்தில் சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.