• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

திமுக சார்பில் பொதுமக்களுக்கு மஞ்சள் கொத்து வழங்கல்

தைத்திருநாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுகவினர் பொதுமக்களுக்கு மஞ்சள் கொத்து வழங்கினர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தைத் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஏழை எளிய பொதுமக்களுக்கு கரும்பு, பச்சரிசி, வெல்லம் என 21 பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்க ஆணை பிறப்பித்துள்ளார்.தமிழ்நாடு முழுக்க திமுகவினர் பொதுமக்களுக்கு தொகுப்புகள் வழங்கி வருகின்றனர்.இதையடுத்து பொள்ளாச்சி 11வது வார்டு திமுகவினர் ஜோதிமணி ஏற்பாட்டில் மாநில விவசாய அணி துணைத் தலைவர் தமிழ்மணி வழங்கினார்,இதில் வார்டு செயலாளர் விஜயகுமார்,முன்னாள் அரசு வழக்கறிஞர் சாதிக் அலி,ஆர். பி. எஸ். தம்பி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.