• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சேலத்தில் காங்கிரஸை கண்டித்து பாஜகவினர் போராட்டம்!

பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு மீது நடவடிக்கை எடுக்க கோரி சேலத்தில் பாஜகவினர் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 5 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைப்பதற்காக சாலை வழியாக பயணம் செய்தபோது, போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு மீது நடவடிக்கை எடுக்க கோரி நாடு முழுவதும் பாஜகவினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல், சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜகவின் பிரச்சாரம் மற்றும் வெளியீட்டுப் பிரிவு சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.