• Wed. May 8th, 2024

காசி விஸ்வநாதர் கோவில் வளாக பணியில் ஈடுபட்டவர்களுக்கு சணலால் ஆன காலணி-மோடி பரிசளிப்பு

Byகாயத்ரி

Jan 10, 2022

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் விரிவாக்கம் செய்யப்படும் வளாகத்தின் முதல் பகுதியை கடந்த மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அந்த வளாக கட்டுமான பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் உணவருந்திய பிரதமர், பின்னர் அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.

இந்த நிலையில், காசி விஸ்வநாதர் கோவில் வளாக பணியில் ஈடுபட்டவர்களுக்கு சணலால் செய்யப்பட்ட காலணிகளை பிரதமர் அனுப்பி வைத்துள்ளார். கோவில் வளாகத்தில் பணிபுரிபவர்கள் தோல் அல்லது ரப்பர் காலணிகளை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலானோர் வெறும் காலுடன் இருப்பதை அறிந்த பிரதமர் மோடி அவர்களுக்கு 100 ஜோடி சணல் காலணிகளை அனுப்பி உள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பூஜை செய்பவர்கள், சேவை பணியாளர்கள், பாதுகாவலர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கும் பிரதமரின் காலணி பரிசு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *