• Fri. Aug 21st, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

நீரஜ் சோப்ரா உருவத்தை ஆப்பிளில் செதுக்கி அசத்தியுள்ளார் சிவகங்கையை சேர்ந்த ஓவியர்!…

By

Aug 9, 2021

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சேர்ந்த இயற்கை ஓவியர் கார்த்தி இலைகள் மற்றும் பழங்களில் ஓவியம் வரைவார். உலகத்திலே பழங்களில் ஓவியம் வரைவது ஒரு சிலரே. இவர் ஆப்பிள் பழத்தில் வரையும் ஓவியத்திற்கு தனி மதிப்பு உண்டு. இவரது ஓவியங்களை இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பலரும் விரும்பி வாங்குவார்கள்.
இந்த வகையில் தற்போது ஜப்பானில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று இந்தியாவின் நூறாண்டு கால கனவை நிறைவேற்றிய தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு தனது ஓவியக்கலையின் வாயிலாக அவரது படத்தை முழுவதுமாக ஆப்பிள் பழத்தில் வரைந்து அன்பளிப்பாக செலுத்தியுள்ளார்.

இது குறித்து மேலும் கூறுகையில் இந்த வருடம் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ்சோப்ராவுக்கு எனது அன்பளிப்பாக இந்த ஓவியத்தை நான் வழங்குவதாக கூறினார்.