காலிபிளவர் – 1, பச்சை பட்டாணி – 200கிராம், தேங்காய் (துருவல்-2கைப்பிடி, மிளகாய் வற்றல் -6, மஞ்சள் தூள் – 1டீஸ்பூன், முந்திரிப்பருப்பு – 7, கசகசா, பெருஞ்சீரகம் – தலா1டீஸ்பூன்) பொடியாக நறுக்கிய வெங்காயம்-3, பொடியாக நறுக்கிய தக்காளி-3, பட்டை, பிரியாணிஇலை, உப்பு தேவையான அளவு, இஞ்சி பூண்டு விழுது-2டீஸ்பூன்
செய்முறை:
காலிபிளவரை நறுக்கி வெந்நீரில்10நிமிடபோட்டு எடுத்து வைத்து கொள்ளவும். பட்டாணியை சிறிது நேரம் வேக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி அதில் தேங்காய் துருவல், மிளகாய் வற்றல், மஞ்சள்தூள், முந்திரிப்பருப்பு, கசகசா, பெருஞ்சீரகம் ஆகியவற்றை நன்கு வதக்கி மிக்ஸியில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, போட்டு வெடித்ததும் வெங்காயம், தக்காளி, பச்சைப்பட்டாணி, காலிபிளவர் சேர்த்து நன்கு வதக்கி, உப்பு போட்டு, நீர் விட்டு நன்கு வெந்த பின் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதித்து கெட்டியாக கிரேவி பதத்திற்கு வந்ததும் இறக்கி விடவும், இது சப்பாத்தி, பூரிக்கு மிக சுவையாக இருக்கும்.
காலிபிளவர்,பச்சை பட்டாணி கிரேவி:
