• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சபரிமலை பெருவழி பாதையில் செல்ல ஐயப்ப பக்தர்களுக்கு பயமில்லை-களத்தில் அரசியல் டுடே

Byகாயத்ரி

Jan 7, 2022

சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை வருகிற 14-ந் தேதி நடைபெறும் நிலையில் இதற்காக கடந்த 30-ந் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. மகர விளக்கு விழா நாட்களில் தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தேவசம் போர்டு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் எருமேலி பெருவழிப்பாதையும் திறந்து விடப்பட்டு உள்ளது.

பெருவழிப்பாதையில் பக்தர்கள் சுமார் 35 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். எவ்வித அச்சமுமின்றி வன பாதுகாவலர்கள் பாதுக்காப்போடு பக்தர்கள் செல்லும்படி கேரள அரசு வழிவகை செய்துள்ளது. பக்தர்களுக்கு வசதியாக வழியில் உணவு கடைகளும் அத்தியாவசிய பொருட்களும் உள்ளது.

பெருவழிப்பாதை வழியாக செல்லும் பக்தர்கள் 18-ம் படி ஏறி அய்யப்பனை தரிசனம் செய்து திரும்புகிறார்கள். பக்தர்கள் எந்த வித தடையும் இல்லாமல் தரிசிக்க அரசு முழு ஒத்துழைப்பும் கொடுத்து வருகிறது.இந்த தகவல்கள் நம் அரசியல் டுடே களத்திலிருந்து நேரடியாக அளித்து வருகிறது.