• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் அபராதம் விதிக்கப்படும்: கோவை கலெக்டர்

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் மூன்றாவது அலை வைரஸ் தொற்று காரணமாக கோவை மாவட்டம் உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுக்கபட்டு வருகிறது,

வரும் ஞாயிறு முதல் தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரான் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை ஆய்வு செய்தார். பின் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 250 படுக்கை வசதிகள் தற்பொழுது உள்ளது மேலும் பொதுமக்கள் நலன் கருதி 250 படுக்கைகள் அதிகப்படுத்த உள்ளது எனவும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய கட்டடத்தில் கோவிட் கேர் சென்டர் தயார் படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கோவை மாவட்டம்முழுவதும் கோவிட் கேர் சென்டர்4300 படுக்கை வசதிகளும்,கோவை அரசு மருத்துவமனையில் ஆயிரம் படுக்கை வசதிகளும், ESIiயில் 350, கொடிசியாவில் 700படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு கல்லூரிகளில் செயல்பட்டு வந்த கோவிட் கேர் சென்டர் செயல்பட உள்ளது. மூன்றாவது அறையை எதிர்கொள்ளும் விதமாக ஆக்சிஜன் 99 கிலோலிட்டர் மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திரவியம் முப்பத்தி ஒன்று உள்ளது,கோவையில்தற்பொழுது மூன்று அலையால் பாதிக்கப்பட்டவர்கள் 70 லிருந்த 300 ஆக உயர்ந்துள்ளது.

பொதுமக்கள் வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது இரண்டு மாஸ்க் அணிந்து செல்வது அவசியம் எனவும் முதல் தவணையாக ஊசி செலுத்தியவர்கள் 96% இரண்டாவது ஊசி செலுத்தியவர்கள் 78% கோவை மாவட்டத்தை பொறுத்தவரை பொதுமக்கள் 99% தடுப்பூ ஊசி போட்டுகொள்ள வேண்டும். வியாபார இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் நாள் அபராதம் விதிக்கப்படும் மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். இதில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ்,நகராட்சி ஆணையாளர் தானு மூர்த்தி மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.