• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

சிலம்பரசனை படப்பிடிப்பில் சந்தித்த பிக்பாஸ் வருண்

ஒரு நாள் இரவில் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அனைவருக்கும் நன்கு தெரிந்த முகமாக மாறியுள்ளார் நடிகர் வருண். கிட்டத்தட்ட 12 வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் தாக்குப் பிடித்த வருண் போட்டியாளர்களிடமும் ரசிகர்களிடமும் எந்தவிதமான கோபத்திற்கும் வெறுப்புக்கும் ஆளாகாமல் நல்ல பெயருடன் வெளியேறினார், சமீபத்தில் கடந்த வருட பிக் பாஸ் சீசன் 4 வெற்றியாளரான நடிகர் ஆரியை சந்தித்தார் வருண்.

இந்த நிலையில் தற்போது சென்னையில் கௌதம் மேனன் – சிலம்பரசன் கூட்டணியில் தயாராகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்துள்ளார் வருண். சிலம்பரசனுடன் வருண் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. மாநாடு படத்தின் வெற்றிக்காக வாழ்த்து தெரிவிப்பதற்கு தான் வருண் வந்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் கௌதம் மேனன் இயக்கத்தில் வருண் நடித்துள்ள ஜோஷ்வா படம் விரைவில் வெளியாக இருப்பதால் அது சம்பந்தமாகவும், மரியாதை நிமித்தமாகவும் அவரை சந்திக்க வருண் சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.