• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

புதிய தொழில்நுட்பத்தால் விவசாயிகள் உற்பத்தியை அதிகப்படுத்த முடியும் : பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் பேட்டி

பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் பொள்ளாச்சி சேம்பர் ஆப் காமர்ஸ் மூலம் விவசாயிகள் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

இந்த கருத்தரங்கில் தமிழக அரசுன் வேளாண்துறை சார்பில் காய்கறி விதைகள்,நெல்,தானிய வகைகள் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்த கூடிய நவீன இயந்திரம் கொண்ட வாகனங்கள் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. பின் செய்தியாளர்களிடம் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கூறும்போது புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள்அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்து 30க்கும் மேற்பட்ட சிறப்பு அழைப்பாளர்கள் கொண்டு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது,

கொரனோ வைரஸ் தொற்று காரணமாக தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் கீழ் கருத்தரங்கில் 300 பேர் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுமேலும் மத்திய அரசின் மூலமாக விவசாயிகள் நலன் கருதி தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சியில் சேம்பர் ஆப் காமர்ஸ் மூலமாக வருடந்தோறும் விவசாயிகளுக்கான கருத்தரங்கம் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்,இதில்தொழில் வர்த்தக சபை தலைவர் ஜிடி கோபாலகிருஷ்ணன்,தொழிலதிபர் மருத்துவர் மகேந்திரன் மற்றும் விவசாயிகள் வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.