• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சேலத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

உருமாறிய கொரோனா வைரஸ் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த  தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் நோய்த்தொற்று  பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக தொங்கும் பூங்கா, சத்திரம் சமுதாயக்கூடம், காந்தி விளையாட்டு மைதானம் உள் அரங்கம் ஆகிய பகுதிகளில் படுக்கைகள் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் சில படுக்கைகளுக்கு செரிவூட்டப்பட்ட ஆக்சிஜன் வசதியும் செய்யப்படுகிறது.

கடந்த வாரத்தில் சேலம் மாநகராட்சி 15 முதல் 20 வரையிலிருந்து தினசரி தொற்று எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களில் 50 ஆக அதிகரிக்பட்டதையடுத்து இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒமைக்ரான் தொற்றை பொறுத்தவரையில் சேலத்தில் இரண்டு பேர் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ள நிலையில் நான்கு பேர் ஒமைக்ரான் முந்தைய அறிகுறிகளோடு பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.