• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

மனைவி தேவை…விளம்பரம் கொடுத்த ஸ்மார்ட் லண்டன் தொழிலதிபர்

Byகாயத்ரி

Jan 6, 2022

லண்டனைச் சேர்ந்த ஒரு இளம் தொழிலதிபர் தனக்கு மனைவி தேவை என்று கூறி விளம்பர போர்டு வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த விளம்பரம் தற்போது வைரலாகியுள்ளது.

லண்டனைச் சேர்ந்தவர் முகம்மது மாலிக். இவர் ‘Findmalikawife.com’என்ற இணையதளத்தை ஆரம்பித்து தனக்கான மனைவியைத் தேட ஆரம்பித்துள்ளார். இதை விட முக்கியமாக, எனக்கு அரேஞ்ச் மேரேஜ் வேண்டாம். அதிலிருந்து என்னைக் காப்பாத்துங்க.. எனக்கு மனைவி தேடிக் கொடுங்க என்று கூறி விளம்பர போர்டையும் வைத்தார்.பிர்மிங்காம் நகரில் இந்த விளம்பர போர்டை வைத்துள்ளார் மாலிக். இதை புகைப்படம் எடுத்த சிலர் அதை தங்களது டிவிட்டரில் போட இது வைரலாகி விட்டது. இப்போது இங்கிலாந்து முழுவதும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மாலிக் பாப்புலர் ஆகி விட்டார். 26 வயதாகும் மாலிக் ஒரு வளரும் இளம் தொழிலதிபர் ஆவார். லண்டனைச் சேர்ந்தவராக இருந்தாலும் இவருக்கு பிர்மிங்காம் நகரும் ரொம்பப் பிடிக்குமாம். தனது 2வது வீடு என்று பிர்மிங்காமை அவர் வரணிக்கிறார். இந்த விளம்பரம் குறித்து அவர் கூறுகையில், அரேஞ்ச் மேரேஜுக்கு நான் எதிரானவன் இல்லை. ஆனால் எனக்கு அது வேண்டாம் என்று நினைக்கிறேன். எனக்கான மனைவியை நானே தேர்ந்தெடுக்க விரும்புகிறேன் என்று கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகையில், இதுவரை எனக்கான பெண்ணை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அது கஷ்டமாக இருக்கிறது. அதனால்தான் பார்த்தேன், விளம்பரம் செய்து விட்டேன் என்று கூறுகிறார் மாலிக். சரி என்ன மாதிரியான பெண் வேணும் தம்பி உங்களுக்கு என்று கேட்டால், முஸ்லீமாக இருக்க வேண்டும். 20களில் வயது இருக்க வேண்டும். நல்ல குடும்பத் தலைவியாக இருக்க வேண்டும். எந்த இனமாக இருந்தாலும் சரி, பிரச்சினை இல்லை. எனது குடும்பம் பஞ்சாபி குடும்பம்.. கூட்டம் ஜாஸ்தி. அதையெல்லாம் சமாளிக்க கூடியவராக இருந்தால் நல்லது என்று சிரிக்கிறார் மாலிக். உண்மையில் இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்தவர் கிடையாது மாலிக், மாறாக பாகிஸ்தானைச் சேர்ந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த விளம்பரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். நிறைய மெசேஜ் வர ஆரம்பித்துள்ளதாம்.

“90ஸ் கிட்ஸ்”களே, இன்னும் என்ன வெயிட்டிங் கிளம்புங்க! விளம்பரத்தை போடுங்க…