• Wed. Sep 30th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சபரிமலை வரலாற்றில் முதல்முறையாக சுவாமி ஐயப்பனுக்கு கர்நாடக பக்தர் ஒருவர் 18ஆயிரம் தேங்காய் நெய் அபிஷேகம்..!

Byவிஷா

Jan 4, 2022

சபரிமலை வரலாற்றில் முதல்முறையாக கர்நாடகாவை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐயப்பனுக்கு 18 ஆயிரம் தேங்காய் நெய் அபிஷேகம் நடத்த உள்ளார். இந்த நெய் அபிஷேகம், நாளை (புதன்கிழமை) காலை நடைபெற இருக்கின்றது. இதற்காக 18 ஆயிரம் தேங்காய்கள் மற்றும் அதற்கான நெய், லொறி ஊடாக கொண்டு வரப்பட்டு ஊழியர்கள் மூலம் தேங்காய்களில் நெய் நிரப்பப்பட்டுள்ளன. குறித்த நெய் தேங்காய்கள், டிராக்டர் வாயிலாக சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நாளை அதிகாலை ஐயப்பனுக்கு தேங்காய் நெய்யபிஷேகம் நடத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.