• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

PCOD என்றால் என்ன? அதனை எப்படி கையாள்வது ?

இளம்பெண்களுக்கு ஏற்படும் சரிசெய்யக்கூடிய ஹார்மோன் குளறுபடி தான் இந்த PCOD. இதை “நோய்” (disease) என்ற கணக்கில் சேர்க்க முடியாது. “குறைபாடு”(deficiency) என்ற கணக்கிலும் சேர்க்க முடியாது. “குளறுபடி” ( Messing up of hormones)
ஏன் இந்த ஹார்மோன்கள் குளறுபடி நிகழ்கிறது ?
இன்சுலின் எனும் ஹார்மோன் கணையத்தில் சுரப்பதை அறிவோம் அதன் வேலை உடலை கட்டமைப்பது; இந்த இன்சுலினின் இன்னொரு வேலை… மாதமாதம் கருமுட்டை சினைப்பையில் இருந்து வெளியேற உதவுவது (ovulation)

  1. ஒருவர் தான் இருக்க வேண்டிய எடையில் இருந்து அதிகமாவது (obesity).
  2. அதிகமாக மாவுச்சத்து உணவுகளை உண்பது (Very high carb diet)
  3. உடல் பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை ( sedentary life style)

இவற்றால் இன்சுலின் தனது வேலையை சரியாக செய்யாமல் தர்ணாவில் ஈடுபடுகிறது.இதனால் PCOD-ஐ பொருத்தவரை கருமுட்டை சரியாக வெளியேறாது. இதற்காகத்தான் PCOD -க்கு மெட்ஃபார்மின் மாத்திரை பரிந்துரை செய்யப்படுகிறது PCOD என்பது எளிதில் குணமாகக்கூடிய ஒரு பிரச்சனை. மாவுச்சத்து குறைத்து நல்ல கொழுப்புணவை அதிகம் உண்ணும் பேலியோ உணவு முறையில் பயன் பெற்ற பல பெண்கள் உள்ளனர்.

தவிர்ப்பது எப்படி?

  1. உடல் எடையில் அதிக மாற்றம் உண்டாகாமல் பார்த்துகொள்ள வேண்டும். அதிகரிக்கும் உடல் எடை பிசிஓடி மட்டும் அல்லாமல் வேறு பல பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடும். உங்கள் உயரத்தை காட்டிலும் எடை அதிகரிக்க கூடாது என்பதில் உறுதியாக இருங்கள்.
  2. கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை அதிகம் எடுக்க வேண்டாம். அதனால் இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது அல்ல. அதற்கு பதிலாக காம்ப்ளக்ஸ் காரோஹைட்ரேட் உடன் நார்ச் சத்து நிறைந்த உணவுகளையும் திட்டமிட்டு எடுத்துகொள்ளுங்கள்.
  3. உணவில் பூண்டு, எள்ளு, கருப்பு தோல் உளுந்து, வெந்தயம், கீரைகள், பழங்கள், காய்கறிகள் இல்லாத உணவை எப்போதும் திட்ட மிடாதீர்கள். இறைச்சி பிரியர்கள் மீன் உணவோடு வாரம் ஒருமுறை தோல் உரித்த கோழி இறைச்சியை எடுத்துகொள்ளுங்கள்.
  4. அதிக இனிப்பு நிறைந்த உணவுகள், கலோரி அதிகமுள்ள உணவுகள், மைதா உணவுகள், ஜங்க்ஃபுட் உணவுகள், நொறுக்குத்தீனிகளை கண்டிப்பாக தவிருங்கள். மாவுச்சத்து நிறைந்த உணவுகள் குறைக வேண்டும்.
  5. உடற்பயிற்சி என்பது உடல் எடையை கட்டுக்கோப்பாக வைப்பதில் மட்டுமல்ல உடல் உறுப்புகளை யும் பலப்படுத்தும். சைக்கிள் ஓட்டுவது நல்ல பயிற்சியாக இருக்கும். வேறு எந்த பயிற்சி செய்ய முடியவில்லை என்றாலும் தினமும் அரைமணி நேரம் நடைபயிற்சி செய்யுங்கள். ஹார்மோன் சுரப்பு சீராகும். சினைப்பையில் இருக்கும் முட்டைகள் நீர்கட்டிகளாக தோன்றி மறை யும். இந்த நீர்க்கட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போதுதான் பிசிஓடி பிரச்சனை உண்டாகிறது. இதன் மூலம் உடலையும் உடல் உள்ளுறுப்புகளையும் சிறப்பாக செயல்படும் போது பிரச்சனை வராமல் தவிர்க்கலாம்.

இவையெல்லாம் கடந்து ஒழுங்கற்ற மாதவிடாய் தொடரும் பட்சத்தில் மருத்துவரை அணுகு பிடிஓடி பரிசோதனையில் அவை உறுதியானாலும் மருத்துவர் பரிந்துரை செய்யும் மாத்திரைகளோடு கடைபிடியுங்கள். விரைவில் மாற்றத்தை கடைபிடிப்பீர்கள் இயன்றவரை வராமல் தடுக்க முயற்சி செய்வதுதான் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.