• Fri. Apr 26th, 2024

கொரோனா மூன்றாவது அலை துவங்கியது – அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனோ தொற்று எண்ணிக்கை கூடிக்கொண்டு இருக்கிறது. காவல்துறை, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மூன்றாவது அலை துவங்கியது என்று வைத்துக்கொள்ளலாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


சென்னை சைதாப்பேட்டை ஐந்துவிளக்கு அருகே 17வது மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், டெல்டாவும் ஓமைக்ரானும் சேர்ந்து தற்போது மூன்றாவது அலையாக சுனாமி அலை போல பரவி வருகிறது.

எனவே தொடர்ந்து மக்கள் ஒத்துழைப்பு என்பது தேவை. முக கவசம் அணிந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.


மாந்தோப்பு ஆண்கள் மற்றும் மாந்தோப்பு பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் நாளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு நாளை தடுப்பூசி போடப்படவுள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கவுள்ளார். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 15 வயதை கடந்த மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்.
60 வயது கடந்தவர்கள் மற்றும் முன் களபணியாளர்களுக்கு வரும் 10ம் தேதியில் இருந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்த திட்டம். 2 தடுப்பூசி செலுத்தி 9 மாத காலம் நிறைவடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது. ஓமைக்ரான் பாதித்தவர்கள் 5 நாளில் தொற்று பாதிப்பில் இருந்து விடுபடுகிறார்கள். ரெண்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஓமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டால் வீட்டிலிருந்து மருத்துவ சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்படும்.


அனைவரும் மருத்துவமனைக்கு வந்தால் தேவையற்ற பதற்றம் ஏற்படும் எல்லோருக்கு ஏ சிம்டம் என்பதால் மருத்துவ சிகிச்சை வீட்டில் இருந்தே பெறலாம். பொதுமக்களின் மருத்துவ ஆலோசனைகளுக்கு மாநகராட்சி சார்பாக 25384520, 46122300 தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *