• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

அலங்காநல்லூர் பகுதியில் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ

சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அலங்காநல்லூர் பகுதிக்கு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற வருகை தந்தார். அப்போது கல்லணை நேதாஜி நகர் திமுக கிளை சார்பாக . வரவேற்பளித்தனர் பின்னர் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த திமுக கொடியை எம்.எல்.ஏ ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கென்னடி கண்ணன், பரந்தாமன், தலைமை செயற்குழு உறுப்பினர் தனராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரிகோவிந்தராஜ், நேதாஜி நகர் திமுக கிளை நிர்வாகிகள் வீரணன்,வெடிமுத்து, ஜெகநாதன்,முருகானந்தம், முனியாண்டி, அலங்காநல்லூர் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தனகருப்பு, தகவல் தொழில் நுட்ப அணி தண்டலைதவசதீஷ்,உட்பட பலர் கலந்து கொண்டனர்..