தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கண்டமனூர் புதுக்கோட்டை கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கண்மாயை முழுமையாக மீட்டெடுக்க வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனுவில், கண்டமனூர் புதுக்கோட்டை கண்மாயில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் விவசாயத்திற்குத் தேவையான நீர்வரத்து பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, நீர்வரத்துப் பாதைகளைச் சீரமைத்து, மழைநீரை முறையாகச் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதுடன், விவசாய நிலங்களுக்குத் தேவையான நீர்ப்பாசன வசதியும் கிடைக்கும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


