திண்டுக்கல் ஜிடிஎன் கலைக்கல்லூரியில் 9வது தேசிய இயற்கை மருத்துவ தின விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கருத்தரங்கம் நாளை 28ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது.

திண்டுக்கல் ஜிடிஎன் கலைக்கல்லூரியின் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் முதல்வர் வி.தீபா, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பட்டதாரிகள் சங்க மாநில தலைவர் சௌந்தரபாண்டியன் ஆகியோர் தெரிவிக்கையில்,
திண்டுக்கல்லில் முதன்முறையாக ஜிடிஎன் கலைக்கல்லூரியில் 9வது தேசிய இயற்கை மருத்துவ தின விழாவை முன்னிட்டு ஜிடிஎன் கல்வி குழுமத்தின் தலைவர் கே. ரத்தினம், இயக்குனர் ஆர்துரை ஆகியோர்களின் வழிகாட்டுதலின் பேரில் கருத்தரங்கம், மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சி இயற்கை மருத்துவ பொருட்கள், புத்தக நிலையம், இயற்கை உணவகம் கொண்ட ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளன.

சிறப்பு விருந்தினர்களாக திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், விஜய் டிவி நீயா நானா கோபி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து 22 தனியார் கல்லூரிகள் 2 அரசு கல்லூரிகள் என மொத்தம் 24 கல்லூரிகளைச் சேர்ந்த 3500 க்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் அரசு மற்றும் தனியார் துறை இயற்கை மருத்துவர்கள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் இந்நிகழ்வில் சென்னை அரும்பாக்கம் மருத்துவமனை இணை இயக்குனர் மணவாளன், செங்கல்பட்டு மருத்துவமனை முதல்வர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

நிகழ்ச்சி நாள் அன்று ஒரு நாள் மட்டும் பொதுமக்களுக்கு கல்லூரியில் உள்ள மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது இந்நிகழ்வில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
பேட்டியின் போது ஜேசன் மெடிக்கல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் திலீப், ஜிடிஎன் கல்லூரி இயற்கை மருத்துவ பேராசிரியர்கள் டாக்டர் கீர்த்தனா, டாக்டர் ஐஸ்வர்யா ஆகியோர் உடன் இருந்தனர்.


