• Wed. Nov 25th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் மலைக்கு இன்று இரண்டாவது நாளாக பக்தர்கள் செல்ல தடை..,

ByKalamegam Viswanathan

Nov 25, 2026

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தூண்டில் உச்சநீதிமன்றம் நேற்று ஒருநாள் தீபம் ஏற்றுக்கொள்ள உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதலே திருப்பரங்குன்றம் மலை சுற்றியுள்ள முழுவதுமே போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

திருப்பரங்குன்றம் தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு ஆறு மணிக்கு மலைக்கு செல்லும் பாதை பழனி ஆண்டவர் கோவில் நுழைவாயில் பகுதியில் தடுப்புகள் போட்டு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது.

நேற்று முன்தினம் ஆறு மணி முதல் திருப்பரங்குன்றம் மலை மேல் செல்வதற்கு பக்தர்களுக்கு பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தொடர்ந்து இன்றும் பக்தர்கள் மலை மீது செல்ல தடை விதித்து போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் குடியிருக்கும் மக்களைத் தவிர மற்ற யாரும் அனுமதிப்பதில்லை.

நேற்று இரவு மாலை 6:00 மணிக்கு திருப்பரங்குன்றம் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பினர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பழனி ஆண்டவர் கோவில் நுழைவாயில் பகுதியில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.