• Wed. Nov 25th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

ஐடிபிஐ வங்கியில் அந்நிய முதலீட்டை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

Byp Kumar

Nov 25, 2026

திண்டுக்கல் தனியார் வணிக வளாகத்தில் உள்ள இந்தியன் டெவலப்மெண்ட் பேங்க் ஆப் இந்தியா நுழைவாயில் முன்பு ஐ டி பி ஐ வங்கி மேலாளர் தங்கமுத்து தலைமையில் ஐ டி பி ஐ பங்குகளை அந்நியத்திற்கு விற்கக் கூடாது என்றும் ,ஐடிபிஐ வங்கியில் அந்நிய முதலீட்டை முதலீடு செய்யக்கூடாது என்றும், தேசத்தின் சொத்துக்களை அணியத்திற்கு விற்கக் கூடாது.

மக்களின் சொத்தான ஐடிபிஐ வங்கியை வெளிநாட்டிற்கு தாரை வார்த்து கொடுக்கக் கூடாது, நமது உழைப்பை சுரண்டிய முதலீட்டை உள்ளே விடக்கூடாது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி 50ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வங்கியின் நுழைவாயிலில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் வருகின்ற டிசம்பர் 3ஆம் தேதி அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாக தெரிவித்தனர் .