மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்ட மன்ற உறுப்பினர் எம்.வீ. கருப்பையா தென் மாவட்ட விவசாயிகளின் வாழ் வாதாரமான முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்ணல் ஜான் பென் னிகுயிக் குடும்பத்தார் மற்றும் லண்ட ன் தமிழ் சங்கத்தினர் வேண்டுகோளை ஏற்று லண்டன் தமிழ் சங்கத்தில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

மேலும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா வில் பழமையும் பெருமையும் வாய்ந்த பாராம்பரியமிக்க தமிழர்களின் வீர விளையாட்டு உலகப் புகழ்பெற்ற அலங்காநல் லூர் ஜல்லிக்கட்டுக்கு ஜான் பென்னிகுக் குடும்பத்தாரை அழைப்பதற்காகவும் வரும் 25ந்தேதி புதன்கிழமை லண்டன் செல்ல உள்ளார். அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஐயிடம் நேரில் சந்தித்து சென்று வருவதற்கு மலர் கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்..

மேலும் தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்நிலை துறை அமைச்சர்ஆனந்திடமும் வாழ்த்து பெற்றார். உடன் லண்டன் செல்லும் வழக்கறிஞர் அழகேசன், சந்தனம் இப்ராகிம் , ஆப்பிள்பாபு ஆகியோர் வந்திருந்தனர்.



