தற்போது முறையான குப்பை சேகரிப்பு மற்றும் தரம் பிரிக்கும் கட்டமைப்பு இல்லாததால், குப்பைகள் பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் தேங்குவதுடன், சில இடங்களில் எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, மெய்வழிச்சாலை மற்றும் சுற்றுவட்டார ஊராட்சிகளுக்கு பொதுவாக இரும்பாலி கிராமத்தில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் நுண் உரம் தயாரிப்பு மையம் அமைக்க உரிய இடத்தை உடனடியாக தேர்வு செய்து, மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



