மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நோட்டம்பட்டியைச் சேர்ந்த அய்யர், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரராக 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில்

சில தினங்களுக்கு முன்பு விடுமுறைக்கு வந்த நிலையில் நேற்று நோட்டம்பட்டியிலிருந்து உசிலம்பட்டி இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு மீண்டும் உசிலம்பட்டியிலிந்து சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த போது குஞ்சாம்பட்டியில் உள்ள சாலை தடுப்பில் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.,

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை கொண்டு வந்த நிலையில்
இன்று உடற்கூறாய்வு செய்யப்பட்டு தொடர்ந்து அவரது உடல் நோட்டம்பட்டியில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இந்தோ திபெத்தியன் பார்டர் போலீசார் தேசியக்கொடி போர்த்தி மலர் வளையம் வைத்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தினர்.,

தொடர்ந்து உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் அய்யர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.,