திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில் நேற்று கார்த்திகை திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

இதனை தொடர்ந்து இன்று காலை உற்சவர் சுப்பிரமணியசுவாமி தெய்வானை அம்மன் சர்வ அலங்காரத்தில் சலங்கை சப்பரத்தில் எழுந்தருளினர்.
இதனை தொடர்ந்து சுவாமி சன்னதி தெரு பெரிய ரத வீதி மேலரத வீதி கீழரதவிதி முக்கிய வீதியில் வழியாக வீதி உலா வந்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதன் முன்பு சுவாமி கோவிலை சென்று அடைந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 23ஆம் தேதி மாலை 7 மணிக்கு மேல் பட்டாபிஷேகம் நடைபெறும்.
அதன்பின்பு 24 ஆம் தேதி திருக்கார்த்திகை முன்னிட்டு காலை 8 மணிக்கு சிறிய வைர தேரோட்டம் நடைபெறும் அதன் பின்பு மாலை கோவில் மூலஸ்தானத்தில் வாழ தீபம் ஏற்றப்பட்டு ஆலயமணி ஒழித்த பின்பு மலை மீது உச்சியில் உள்ள உச்சி பிள்ளையார் கோவிலில் மகா தீபம் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.
