சாத்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் இதில் முக்கிய நிகழ்வான கந்தசஷ்டி சூரசம்ஹார விழா நடைபெற்றது.

ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு திருவிழாக்கள் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா கடந்த 10ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது
கந்தசஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் ஆறாம் நாள் திருவிழாவாக நேற்று மாலை நடைபெற்றது.

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு 21 வகையான திவ்யப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து முருகனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது பின்னர் தீபாராதனை நடைபெற்றது.

மாலையில் நடைபெற்ற சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியானது முருகன் கோவில் மேற்கு மாட வீதி அக்ரஹார வீதி மாரியம்மன் கோவில் தெரு முருகன் கோவில் நடுத்தெரு பிள்ளையார் கோவில் தெரு, பட்டையன் செட்டி தெரு மற்றும் சாத்தூர் மெயின் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முருகன் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முருகன் முதலில் யானை முகம் கொண்ட சூரனையும் இரண்டாவதாக சிங்க முகம் மூன்றாவதாக சூரன் முகம் நான்காவதாக சேவலாக மாறிய சூரனை வதம் செய்தார்.
இந்த சூரசம்ஹாரத்திற்கு சஷ்டி விரதம் இருந்த பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர் முருகன் சூரனை வதம் செய்யும்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் முருகா, கந்தா, வேலா, அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர். சூரன் வதத்திற்கு பின்னர் முருகனுக்கு தீபாராதனையின் போது பக்தர்கள் பக்தியுடன் வணங்கி வழிபட்டனர் இந்நிகழ்ச்சியில் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சூரசம்ஹார நிகழ்ச்சியை தொடர்ந்து கந்த சஷ்டி திருவிழாவில் நிறைவு நிகழ்ச்சியாக முருகனுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.