தேனி மாவட்டம், கம்பம் அருகில் உள்ள கருநாத்த முத்தன்பட்டியைச் சேர்ந்த முருகன் (வயது 70) உடல்நலக் குறைவால் கம்பம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஆதரவற்ற நிலையில் இருந்த அவரது உடலை நல்லடக்கம் செய்ய முடியாமல் அவரது மனைவி ராமுத்தாய் தவித்து வந்தார். இதுகுறித்து அவர் விடுத்த கோரிக்கையை ஏற்று, கம்பம் அரசு மருத்துவமனை சுகாதார ஆய்வாளர் சுல்தான் இப்ராஹிம் தகவல் கொடுத்தார்.
அதன் அடிப்படையில், கம்பம் அரசு மருத்துவமனையில் இருந்து உடலைப் பெற்ற தமமுகவினர், கம்பம் பிரமலைக் கள்ளர் சமுதாய மயானத்தில் அவரது மத வழக்கப்படி இன்று (15-11-2026) காலை நல்லடக்கம் செய்து கொடுத்தனர்.

இதில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் அப்பாஸ் மந்திரி, கம்பம் நகர் மன்ற உறுப்பினர் கம்பம் சாதிக், தமுமுக நிர்வாகிகள் சலீம் பாட்ஷா, ஹக்கீம், அன்சாரி, ஜெய்லானி, பாஹிம் பார்தின் ஆகியோர் கலந்து கொண்டு முதியவரின் உடலை நல்லடக்கம் செய்தனர்.
ஆதரவற்ற முதியவரின் உடலை மனிதநேயத்தோடு நல்லடக்கம் செய்து கொடுத்த தமுமுகவினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.