தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உத்தமபாளையம் மேற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழகம் சார்பாக, “நம்ம விஜய், நம்ம எம்.எல்.ஏ., நம்ம நலம் காக்கும் மருத்துவச் சேவை” என்ற பெயரில் முற்றிலும் கட்டணமில்லாத பல்நோக்கு மருத்துவ முகாம் உத்தமபாளையத்தில் உள்ள முகமது பாத்திமா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இம்முகாமை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா துவக்கி வைத்தார்.

முகாமில் பொது மருத்துவம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கண் பரிசோதனை, பல் மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு வலி, குழந்தைகள் நல மருத்துவம், பெண்கள் நல மருத்துவம் உள்ளிட்ட ஏராளமான மருத்துவச் சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு, தேவையானவர்களுக்கு இலவச மருந்துகளும் வழங்கப்பட்டன.
இதில் உத்தமபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்நிகழ்வில் கழக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.