• Mon. Nov 16th, 2026

மேலக்கால் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் தின விழா..,

ByKalamegam Viswanathan

Nov 15, 2026

சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்காலில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இங்குள்ள அங்கன்வாடி மையத்தில் சர்க்கரை பொங்கல் வைத்து குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.

குழந்தைகள் முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு வேடமிட்டும் தேசப்பிதா மகாத்மா காந்தி மகாகவி பாரதியார் உள்ளிட்டோரின் வேடமணிந்தும் பார்வையாளர்களை கவர்ந்தனர். குழந்தைகள் தின விழா ஏற்பாடுகளைஅங்கன்வாடி பணியாளர்கள் செய்திருந்த நிலையில் பெற்றோர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.