• Mon. Nov 16th, 2026

சோழவந்தான் அருகே தென்கரையில் சூரசம்ஹார விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..,

ByKalamegam Viswanathan

Nov 16, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத திருமூலநாத சுவாமி கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சூரசம்ஹார விழா நடந்தது.இவ்விழாவை முன்னிட்டு கடந்த 10 தேதிஅன்று கணபதி ஹோமத்துடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை 5 மணி அளவில் கோவில் முன்பாக சூரசம்ஹார விழா நடைபெற்றது. பக்தர்கள் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.அங்கு கூடியிருந்த பக்தர்கள் வெற்றிவேல்முருகா,வீரவேல்முருகா என்று பக்தி கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து கோவில் முன்பாக உள்ள விநாயகர் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பால் பால் தயிர் சந்தனம் பன்னீர் இளநீர் உள்ளிட்ட
21 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது சிவாச்சாரியார் கண்ணன் என்ற பரசுராம் தலைமையில் அர்ச்சகர் செந்தில் உள்ளிட்டோர் பூஜைகள் செய்தனர் தீபாராதனை காட்டப்பட்டது ஏற்பாடுகளை கந்தசஷ்டி விழா குழுவினர் செய்திருந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.காடுபட்டி இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி சப் இன்ஸ்பெக்டர்கள் சின்னச்சாமி, அன்பழகன் மற்றும் போலீசார் உள்பட ஊர் காவல் படையினர்பாதுகாப்பு செய்திருந்தனர்.

தென்கரை ஊராட்சி சார்பாக கூடுதலான சுகாதார பணி, தெருவிளக்கு, குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதேபோல் திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலிலும் சூரசம்ஹார விழா நடந்தது. பரசுராமன் பட்டர்பூஜை செய்து பிரசாதம் வழங்கினார், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் உள்ள முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடைபெற்றது. அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார். சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தனர்.